Pages

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை

Saturday 15 September 2018





அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தொழிற்கல்வி ஆசிரியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தில், 50 சதவீதம், ஓய்வூதிய கணக்கில் சேர்க்கப்படும்' என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 1978 -- 79ம் கல்வியாண்டில், பிளஸ் 2 அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி என, இரண்டு விதமான கல்வி முறை அமலானது. தொழிற்கல்விக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இவர்கள் அனைவரும், 2002 வரை, படிப்படியாக காலமுறை ஊதியத்தில், பணி வரன்முறை செய்யப்பட்டனர்.இந்நிலையில், தொகுப்பூதிய காலம், ஓய்வூதியத்திற்கு கணக்கிடப்படாது என, அரசு அறிவித்துஇருந்தது. இதுகுறித்து, தொழிற்கல்வி ஆசிரியர்கள் தரப்பில், நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்குகளில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தொகுப்பூதியத்தில், 50 சதவீத காலத்தை, ஓய்வூதிய கணக்கில் எடுத்து கொள்ள, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.அவரது உத்தரவு விபரம்:தொழிற்கல்வி ஆசிரி யர்களாக, 2003 ஏப்., 1க்கு முன் பணி வரன்முறை செய்யப்பட்டவர்களில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு, அவர்களின் பணி காலத்தில், 50 சதவீதம், ஓய்வூதிய கணக்கில் சேர்க்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!