கணக்கில் பணம் இருந்தாலும் குறைந்த பட்ச ரீசார்ஜ் செய்யாதவர்கள் இணைப்பை துண்டிக்கக் கூடாது என டிராய் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இருந்து மொபைல் உபயோகிப்பாளர்களுக்கு தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் குறும் தகவல் ஒன்றை அனுப்பி வருகிறது. அந்த குறும் தகவலில், 'மாதம் தோறும் குறைந்த பட்ச தொகைக்கு ரீசார்ஜ் செய்தாக வேண்டும். அப்படி இல்லையெனில் முதலில் உங்களது வெளி அழைப்புக்கள் துண்டிக்கப்படும். அதன் பிற்கும் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் அழைப்பை பெறும் வசதியும் துண்டிக்கப்படும்' என அறிவிக்க்ப்பட்டுள்ளது.
எனவே கணக்கில் தொகை இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்தே ஆக வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு மொபைல் உபயோகிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஒட்டி தொலை தொடர்பு சீரமைப்பு நிறுவனமான டிராய்க்கு பலர் புகார் அளித்துள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று டிராய் அமைப்பின் தலைவர் ஷர்மா ஒரு தகவலை கூறி உள்ளார்.
ஷர்மா, 'டிராய் அமைப்பு பொதுவாக தொலை தொடர்பு நிறுவனங்களின் திட்டத்தில் தலையிடுவதில்லை. ஆனால் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்கில் பாக்கித் தொகை இருந்தாலும் குறைந்த பட்ச ரீசார்ஜ் செய்ய வேண்டும் என வற்புறுத்துவது சரியில்லை. ஆகவே போதிய தொகை இருப்பில் உள்ள வாடிக்கையாளர்களை ரீசார்ஜ் செய்ய வற்புறுத்தவோ அவர்கள் இணைப்பை துண்டிக்கவோ கூடாது என டிராய் உத்தரவிடப்பட்டுள்ளது' என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment