திருவண்ணாமலை: செய்யாறு அருகே தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு தொடக்கப்பள்ளியில் நவீன கருவிகளைக் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருவண்ணாமலை அடுத்த மாந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்க பள்ளியில் மாணவர்களுக்காக சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்த தொடக்கப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும் வகையில் கணினி பாடம், விளையாட்டு பயிற்சி மற்றும் யோகா ஆகியவை கற்பிக்கப்படுகிறது.
மேலும் மாநில அளவில் சிறந்த அரசு பள்ளியாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி செயல்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு முன் உதாரணமாக செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவிக்கின்றனர்
No comments:
Post a Comment