Pages

Sunday, 31 May 2020

ஏன் phonetic முறையில் ஆங்கிலம் கற்க வேண்டும்? -English Phonetics unit 3




நம்ம ஊர் கிராமத்துக் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

இடைநிலைப் பயிற்சி மட்டும் பெற்றிருந்தால் கூட ஆசிரியர்கள் கவலைப்படத் தேவை இல்லை, எளிதாகக் கற்றுக் கொடுக்கலாம்.

Sounds மூலம் எழுத்துக் கூட்டி வாசிக்க முடியும்.CAT என்பதை சாதாரணமாக எழுத்துக் கூட்டி வாசித்தால் CசிAஏTட்டி (சியேட்டி)என்று தானே சொல்ல முடியும். ஆனால் sounds மூலம் வாசித்தால் இதைச் சரியாக உச்சரிக்க முடியும்.

தொடக்க நிலை வகுப்புகளில் strong foundation இருந்தால் தான்,புரிந்து படித்தால் தான் பிற பாடங்களை ,மேல் வகுப்புகளைத் தடையில்லாமல் கடந்து செல்ல முடியும்.
இல்லையெனில் 6 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி ஆசிரியர்களைக் குறை சொல்வர்.9 ஆம் வகுப்பு ஆசிரியர் நடுநிலை ஆசிரியர்களைக் குறை சொல்வர்.11 ஆம் வகுப்பு ஆசிரியர் உயர் நிலை ஆசிரியர்களைக் குறை சொல்வர். அப்புறம் college ல் எந்த school ல் படிச்சேன்னு குறை கேள்விகள். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இது ஒன்று தான் மாறாமல் சொல்லப்பட்டு வருகிறது.

JOLLY PHONICS என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் இதைத் தான் smart board,hi- tech என்ற பெயரில் சொல்லித் தருகிறார்கள்.

இதை பல creative ideas,Games வோடு சேர்ந்து கற்பிக்க supporting materials நிறையவே Googleல் கிடைக்கும்.புதிதாக கூட உருவாக்கத் தேவையில்லை.

இன்னும் கிழிந்த டவுசரோடு,காலை சாப்பாடின்றி பசியோடு என் அனுமானத்தில் 40 சதவீதக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இருக்கின்றனர்.இந்தக் குழந்தைகள் phonetic முறையினால் சர்வ சாதாரணமாக ஆங்கிலத்தில் வாசிப்பதை விழுப்புரம் மாவட்டத்தில் கூடவே இருந்து கவனித்திருக்கிறேன்.இது தரும் ஆங்கில வாசிப்பு அறிவை வேறு எதுவும் தற்போது வரை ஈடு செய்யவில்லை.

Phonetic Phonetic DVD, Teacher's Module, Students Work Book தடையில்லாமல் கொடுத்து,ஆசிரியர்களுக்கு ஆர்வமான,பிடிக்கக் கூடிய பயிற்சிகளும் அளித்தால் முதல் பருவத்திலேயே விஸ்வரூப வளர்ச்சியை ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் காண முடியும்.அதற்கான அங்கீகாரமான பாடவேளையும்,தொடர் கண்காணிப்பும் இருந்தால் ஜெயிப்பது நிஜம்.இதை யார்,யாருக்கு எடுத்துச் சொல்வது?

இது மட்டுமே Best ன்னு சொல்லலன்னு கூட வச்சுக்கங்க.இதவிட bestஆ இருந்தா எங்க கிராமத்துக் குழந்தைகளுக்கு வேற வேலைல மறந்துராமக் குடுங்கன்னு தான் சொல்லுறோம்.

அப்புறம் ஒரு விஷயம்.இது நம்ம தமிழக அரசால்,நமது ஆசிரியர்களால்,நம்ம குழந்தைகளுக்குத் தகுந்த மாதிரி உருவாக்கப் பட்ட தரமான படைப்பு.சும்மா ஞாபகப் படுத்துறேன்.

எத்தனை வருஷமானாலும் அவுங்கவுங்களுக்கு அம்மா,அம்மா தான்.பழசாயிராது.

OK. Third unit பாருங்க.Beach back waterல one..two..three song shooting. Early morning 4 மணிக்கே போய் உயிரோட மீனப் பிடிக்கச் சொல்லி அத வச்சு shooting எடுக்குறதுக்கு பட்ட பாடு இருக்கே...அப்பப்பா...shooting முடிச்சிட்டு அந்த மீன fry பண்ணி சாப்டலாம்னு ஆசையா இருந்தோம்.ஆனா கடைசில கை தட்டி,பாத்திரம் கொட்டி திரும்பவும் மீனு தண்ணிக்குள்ளயே போயிருச்சு.shootingல நடிச்சு ஓடிப் போன அந்த மீனக் கண்டு பிடிச்சுக் கொண்டு வர்றவங்களுக்கு 10 phonetic DVD prize.


அனுபவம் தொடரும்..
அமலன் ஜெரோம்
படப்பதிவு இயக்குநர்

No comments:

Post a Comment