Pages

Thursday, 6 September 2018

தினம் ஒரு ஆத்திசூடி -உடையது விளம்பேல்






உடையது விளம்பேல்

உன்னிடம் ஒரு சிறந்த பொருள் இருக்கிறது. அதை மற்றவர் அறிந்து புகழ வேண்டும் என்று நீ ஆசைப்படுகிறாய் அதனால் அப்பொருளைப் பற்றி பிறரிடம் பேசித் தற்பெருமை கொள்கிறாய். நீ சொல்வதைக் கேட்ட பிறர் உன்னை பற்றி என்ன நினைப்பார்கள் தெரியுமா? ஆடம்பரக்காரன், ஆடம்பரக்காரி என்று நினைப்பார்கள். உன்னை அவமதிப்பார்கள். ஆகையால், உன்னிடத்திலுள்ள சிறந்த பொருளைப் பெருமையோடு பிறரிடம் சொல்லாதே.


No comments:

Post a Comment