அஞ்சல் குறியீட்டு எண் என்று அழைக்கப்படும் பின்கோடு, இந்திய அஞ்சல் துறையினால் உருவாக்கப்பட்டது. இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணை வைத்து எந்த அஞ்சலகம் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.
1972-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 6 இலக்கங்கள் கொண்ட அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறைக்கு வந்தது. இந்தியா 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அஞ்சல் குறியீட்டு எண்ணின் முதல் இலக்கம் மண்டலத்தையும் இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும் குறிக்கிறது.
பின்னால் இருக்கும் மூன்று இலக்கங்கள் அஞ்சலகத்தை அடையாளப்படுத்துகின்றன. சமயபுரம் அஞ்சலகக் குறியீட்டு எண் 621 112. இதில் 62 என்பது தமிழ்நாட்டையும் 1 திருச்சி மாவட்டத்தையும், பின்னால் உள்ள மூன்று இலக்கங்கள் அஞ்சலகம் இருக்கும் இடத்தையும் குறிக்கின்றன. தமிழ்நாட்டின் அஞ்சல் குறியியீட்டு எண்களில் முதல் இரு இலக்கங்கள் 60 முதல் 66வரை அமைந்திருக்கின்றன.
இந்த எண்களைப் பார்த்தாலே தமிழ்நாடு என்று சொல்லிவிடலாம். 67-69 கேரளா, 51-53 ஆந்திரப் பிரதேசம், 56-59 கர்நாடகா, யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 605 என்று எண்களை வழங்கியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment