Pages

Saturday, 15 September 2018

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட்: கவுன்ட் டவுன் தொடங்கியது




புவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை (செப். 16) இரவு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
 இதற்கான கவுன்ட் டவுன் சனிக்கிழமை பிற்பகல் 1.08 மணிக்கு தொடங்கியது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 இன்று இரவு 10.08 மணிக்கு...: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.08 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.










பிரிட்டனைச் சேர்ந்த சுர்ú ர செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனத்துக்குச் சொந்தமான "நோவா எஸ்.ஏ.ஆர்.' மற்றும் "எஸ்1-4' ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களையும் வணிக ரீதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) விண்ணில் ஏவுகிறது.
 இரண்டு செயற்கைக்கோள்கள்: இதில் 445 கிலோ எடைகொண்ட "நோவா எஸ்.ஏ.ஆர்.' செயற்கைக்கோள், இயற்கைப் பேரிடர், வெள்ளப் பாதிப்பு, பனிப் படலம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பணிக்காக அனுப்பப்படுகிறது. 444 கிலோ எடைகொண்ட "எஸ்1-4 செயற்கைக்கோள்', பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உளளிட்ட பணிக்காக அனுப்பப்படுகிறது.இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியிலிருந்து 583 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment