Pages

Sunday, 16 September 2018

” இந்தியாவில் உள்ள 13,500 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லை ” – ஆய்வில் தகவல்




இந்தியாவில் உள்ள 13,500 கிராமங்களில் பள்ளிக் கூடங்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கல்வித்தரம் குறித்து மத்திய அரசு நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

கல்வியை ஊக்கப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. குறிப்பாக கிராமப்பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சமீபத்தில் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் கல்வியின் தரம் பற்றி ஆய்வு நடத்தியது. மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் உள்ள 13,511 கிராமங்களில் பள்ளிக்கூடமே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் மட்டுமே அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது என்றும், மற்ற மாநிலங்களை விட வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சில கிராமங்களைத் தவிர பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக் கூடங்கள் செயல்படுவதாக ஆய்வு கூறுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயாவில் 41 கிராமங்களில் மட்டுமே பள்ளிக்கூடம் இல்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் தான் 3,474 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து பீகாரில் 1,493 கிராமங்களிலும், மேற்கு வங்காளத்தில் 1,277 கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment